Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
சுற்றுலா தலமாகும் முத்துப்பேட்டை!: 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
-----------------------------------------------------------------

முத்துப்பேட்டை சதுப்புநிலக்காடுகள் இதேபோல் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்புநிலக் காடு முத்துப்பேட்டை. இது 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது; முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல்மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக்கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப் பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் (பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளமிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பின்டெயில் டக் (ஊசி வால் வாத்து) பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவை முத்துப்பேட்டையில் காணப்படும் முக்கிய பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வௌவால் ஆகிய பாலூட்டிகள் இங்கு வாழ்கின்றன. ரூ. 2 கோடி ஒதுக்கீடு முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இழைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல், வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், மரப்பாலம், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் முத்துப்பேட்டை சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும்" என்று கூறப்பட்டுள்ளது.




You might also like:







முத்துப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் - திரு. R.K.P.நடராஜன் 
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் - திரு. அருணாசலம் 
ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் - திரு. சரவணன் 
தில்லைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் - திரு. யோகநாதன் 
மங்களூர் ராட்சி மன்ற தலைவர் - திரு. ரவிக்குமார் 



வெற்றி விநாயகர் ஊர்வலம் 
இந்து ஒற்றுமை பெருவிழா 

அன்புடையீர் வணக்கம்.
   நிகழும் ஸ்ரீ விக்ருதி ஆண்டு புரட்டாசி மாதம் 2-ம் நாள் 18-09-2010 சனிகிழமை சரியாக மாலை 3.00 மணிக்கு ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து துவங்கி வழக்கம் போல் விசர்சன நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பக்தகோடிகளும், பொதுமக்களும், ஆன்மீக சிந்தனையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .

வரவேற்புரை: 
திரு. கூ.ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள், வெற்றி விநாயகர் ஊர்வல ஒருங்கிணைப்பாளர், உதயை.

தலைமை:
திரு. G. ராஜேந்திரன் அவர்கள், இந்து முன்னணி ஒன்றிய தலைவர்.

முன்னிலை: 
திரு. A. ரெங்கசாமி அவர்கள், மாநில பொதுகுழு உறுப்பினர், பா.ஜ.க.

ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்:
திரு. சக்தி. ராம. சிதம்பர தேவர்  அவர்கள்.

சிறப்புரை:
துறவி. ஸ்ரீ ராகவானந்தா சுவாமிகள் அவர்கள்.
துறவிகள் பேரவை மாநில செயலாளர். 


சிந்திப்பீர் 
இந்துக்கள் சிறுபான்மையானால் தமிழ், தமிழர்கள் நிலை என்னவாகும்?  
முத்துப்பேட்டையில் இன்று (29.08.2010) மாலை 06.15 முதல் 08.00 மணி வரை மழை கொட்டி தீர்த்தது இதனால் முத்துப்பேட்டை சில மணி நேரம் ஸ்தம்பதித்தது....


முத்துப்பேட்டையையும் ஜாம்புவானோடையையும் இணைக்கும் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன் முதல் கட்டமாக தற்காலிக பாலம் கட்டப்பட்டது இன்று (23.08.2010) தற்காலிக பாலம் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது இன்றே பழைய பாலத்தை இடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.


புதிய தற்காலிக பாலத்தின் புகைப்படம் 


இடிக்கப்படும் பழைய பாலத்தின் புகைப்படம் 

 


பழைய பாலத்தின் செயற்கைகோள் புகைப்படம் 

ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்.
ஓசூர் ஹேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல், பெருவிழா ஜெப கூட்டம் நடக்கிறது. ஓசூர் டவுன், மத்திகிரி, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. மத பிரசாரம் என்ற பெயரால், இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக, இந்து அமைப்புகள் சார்பில் புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், மத பிரசாரம் மற்றும் மத மாற்றத்தைக் கண்டித்து, ஓசூரில் நேற்று, அரை நாள், "பந்த்'க்கு அழைப்பு விடுத்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு, பஜ்ரங்தள் நகர தலைவர் விஷ்ணுகுமார் தலைமையில் இந்து அமைப்பினர், நேற்று முன்தினம் மாலை, வீதி, வீதியாகச் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், "பந்த்'க்கு ஆதரவு கேட்டனர். இந்து அமைப்புகளின், "பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்து, ஓசூர் நகர் முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.
டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு நூறு அடிக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். ரயில்வே ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், மூன்று பேர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இந்து அமைப்பினர் மூன்று கடைகளை அடைக்க கூறியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடைகளை சிலர் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ஜனபர் பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (31), மத்திகிரி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுமன் (24), ஓசூர் நகர அமைப்பாளர் வெங்கடேஷ் (28), நாகராஜ் (25), மூர்த்தி (28) ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தகவலறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், இந்து அமைப்பினரும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகையிட்டு, கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். மதியம் 1 மணிக்கு பின், வழக்கம் போல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு கூறுகையில், "ஓசூர் தாலுகா பகுதியில், இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து, அமைதியான முறையில் "பந்த்' நடத்தப்பட்டது. மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.