வெற்றி விநாயகர் ஊர்வலம் 
இந்து ஒற்றுமை பெருவிழா 

அன்புடையீர் வணக்கம்.
   நிகழும் ஸ்ரீ விக்ருதி ஆண்டு புரட்டாசி மாதம் 2-ம் நாள் 18-09-2010 சனிகிழமை சரியாக மாலை 3.00 மணிக்கு ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து துவங்கி வழக்கம் போல் விசர்சன நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பக்தகோடிகளும், பொதுமக்களும், ஆன்மீக சிந்தனையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .

வரவேற்புரை: 
திரு. கூ.ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள், வெற்றி விநாயகர் ஊர்வல ஒருங்கிணைப்பாளர், உதயை.

தலைமை:
திரு. G. ராஜேந்திரன் அவர்கள், இந்து முன்னணி ஒன்றிய தலைவர்.

முன்னிலை: 
திரு. A. ரெங்கசாமி அவர்கள், மாநில பொதுகுழு உறுப்பினர், பா.ஜ.க.

ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்:
திரு. சக்தி. ராம. சிதம்பர தேவர்  அவர்கள்.

சிறப்புரை:
துறவி. ஸ்ரீ ராகவானந்தா சுவாமிகள் அவர்கள்.
துறவிகள் பேரவை மாநில செயலாளர். 


சிந்திப்பீர் 
இந்துக்கள் சிறுபான்மையானால் தமிழ், தமிழர்கள் நிலை என்னவாகும்?  
முத்துப்பேட்டையில் இன்று (29.08.2010) மாலை 06.15 முதல் 08.00 மணி வரை மழை கொட்டி தீர்த்தது இதனால் முத்துப்பேட்டை சில மணி நேரம் ஸ்தம்பதித்தது....


 
 
முத்துப்பேட்டையையும் ஜாம்புவானோடையையும் இணைக்கும் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன் முதல் கட்டமாக தற்காலிக பாலம் கட்டப்பட்டது இன்று (23.08.2010) தற்காலிக பாலம் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது இன்றே பழைய பாலத்தை இடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.


புதிய தற்காலிக பாலத்தின் புகைப்படம் 


இடிக்கப்படும் பழைய பாலத்தின் புகைப்படம் 

 


பழைய பாலத்தின் செயற்கைகோள் புகைப்படம் 

 
 
 
 
 
 
 
 
 
 


TAGS:
LAGOON, MUHTUPETTAI LAGOON, MUTHUPETTAI MANGROVES, MUTHUPET MANGROVES, LAGOON STILLS, PHOTOS, PICTURES, IMAGES, SNAPS.



SEE ALSO:

 நமது முத்துபேட்டையில் விநாயகர் ஊர்வலம் செப்டெம்பர் மாதம் பதினெட்டாம் தேதி மாலை 3.30 மணியளவில்  நடைபெற இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்...


முழுமையான விவரங்கள் விரைவில்....


PLAY SHIVA BHAJAN 1












FIREFOX:  RIGHT CLICK AND SAVE LINK US
IE: RIGHT CLICK AND SAVE TARGET US

PLAY RAMA BHAJAN 1





FIREFOX:  RIGHT CLICK AND SAVE LINK US
IE: RIGHT CLICK AND SAVE TARGET US

BANK NAME: 
LAKSHMI VILAS BANK (LVB)


ADDRESS:
BACK SIDE POLICE STATION, 
OLD POST OFFICE ROAD,
MUTHUPET,
TIRUVARUR DISTRICT,
TAMILNADU.
PIN - 614714.


IFS CODE:
LAVB0000452

 
BRANCH CODE:
000452

PHONE:
04369-260463



BANK NAME: 
ICICI BANK

ADDRESS: 
OLD POST OFFICE ROAD,
MUTHUPET,
TIRUVARUR DISTRICT,
TAMILNADU.
PIN - 614714.


IFS CODE:
ICIC0006092

PHONE:
04369-260448
04369-261597


BANK NAME: 
STATE BANK OF INDIA (SBI)

ADDRESS: 
(10661)-MUTHUPET
NO 50, VICTORIA BAZAAR,
MUTHUPET,
TIRUVARUR DISTRICT,
TAMILNADU,
PIN - 614714.

IFS CODE:
SBIN0010661

PHONE:
04369-261599







TAGS:
MUTHUPET SBI IFS CODE, MUTHUPET SBI MICR CODE, MUTHUPET SBI BRANCH CODE, MUTHUPET SBI BRANCH ADDRESS, MUTHUPET SBI BANK EMAIL, MUTHUPET SBI PHONE



என்ன கொடுமையடா இது?
இல.கணேசன்
--

காங்கிரஸ் என்பது ஒரு மதச்சார்பற்ற கட்சி; பாரதிய ஜனதா ஒரு வகுப்புவாதக் கட்சி'' என்கிற தோற்றம் நிலவி வருகிறது. ஆம், இரண்டுமே தோற்றம்தான். காட்சிப் பிழைதான். உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் போற்றுவது பா.ஜ.க.; பச்சையான வகுப்புவாதக் கட்சி காங்கிரஸ் என்பதுதான் உண்மை நிலை.  இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது. காங்கிரûஸத் தோற்றுவித்தவன் ஆங்கிலேயன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மகாராணிக்கு ஓர் எதிர்க்கட்சி அன்று இருந்ததுபோல இங்கும் ஒரு கட்சியை உருவாக்க விரும்பினான். பெயரளவுக்குத்தான் எதிர்க்கட்சி. இன்றைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ள பிரதான எதிர்க்கட்சியின் பங்கைத்தான் அன்றைய காங்கிரஸ் செய்தது. காலம் மாறியது. லோகமான்ய பாலகங்காதர திலகர் போன்றவர்கள் தலையெடுத்தார்கள். எந்தக் காங்கிரஸ் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைத்து வெள்ளையன் தொடங்கினானோ அதே காங்கிரஸ், அரசுக்கு எதிராகத் திரும்பியது. வீறுகொண்டது. ""சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை'' என முழங்கியது. ""நீங்கள் ஒரு இந்துக் கட்சி. உங்களுக்குச் சுதந்திரம் தந்தால் முஸ்லிம்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் முஸ்லிம்களது ஆதரவையும் பெற்று வாருங்கள். பரிசீலிப்போம்'' என்றனர் ஆங்கிலேயர்கள். கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆங்கிலேயர் தந்த முத்திரை இந்துக் கட்சி. முஸ்லிம் லீக் தொடங்கவும் ஆங்கிலேயனே பின்னணியில் திட்டமிட்டான். ஆஹாகான் தலைமையில் பின்னாளில் முஸ்லிம் லீகும் தோன்றியது. ""முஸ்லிம் சமுதாயம் காங்கிரஸýக்குப் பின்னால் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆண்ட சமுதாயம்! உங்கள் உரிமைகளை நீங்கள் கேளுங்கள்'' என்று முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டான். அவனது தந்திரம் பலித்தது.  1857-ம் ஆண்டு யுத்தத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். அந்த ஒற்றுமை குலைந்தது.  காங்கிரஸின் சிந்தனையில் எப்படியாவது முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் கொண்டு வரவேண்டும் என்கிற ஒரே சிந்தனை நிலவியது. முஸ்லிம்கள் காங்கிரஸிடம் ஆர்வம் காட்டவில்லை.  காங்கிரஸ் மாநாட்டுக்கு வரும் முஸ்லிம் பிரதிநிதிகளது போக்குவரத்துச் செலவைக் கட்சியே ஏற்றது.  மற்றவர்கள் பிரதிநிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்குத் தரப்படும் எளிய உணவு முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்கு விசேஷ ஏற்பாடு.  காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் அணிய வேண்டும். காங்கிரஸின் வெள்ளை கதர் தொப்பி அணிய வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மத உடையுடன் (மத உடை என எதுவும் இல்லை. தேசத்தின் உடைதான்) மதத் தொப்பியுடன் வரலாம்.  சாதாரணமாக ஒரு கூட்டத்தில் ஒரு தீர்மானம் பெரும்பான்மை ஆதரவின்றிப் போனால் தோற்றுப் போகும். ஆனால், காங்கிரஸ் கூட்டங்களில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி அதிருப்தி தெரிவித்தாலும் தீர்மானம் விலக்கிக் கொள்ளப்படும்.  மதச்சார்பற்ற தன்மை பேசுகிற காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களது மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள்.  தேசியத்தன்மை உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்தும் காங்கிரஸ் முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதி என்கிற அந்தஸ்தை, அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட்டது. பின்னாளில் இந்த மதச்சார்பற்ற கட்சிதான் முஸ்லிம் லீகோடு கூட்டணியே வைத்தது.  1916-ல் லக்னௌ ஒப்பந்தம் என்பது காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம் லீக் தலைவர்களும் செய்து கொண்ட தாஜா ஒப்பந்தம். அதன் முக்கியமான அம்சங்கள் இரண்டு.  ஏற்கெனவே 1909-ல் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவைகளில் ஒதுக்கீடு வழங்கியது போதாது. இன்னும் கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும்.  முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி தேவை.  கிலாபத் இயக்கம் என்பது முற்றிலும் மதம் சம்பந்தப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் மதச்சார்பற்ற காங்கிரஸ் முழு வீச்சில் பங்கேற்றது.  ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிக்கு காங்கிரஸில் இருந்த முஸ்லிம் தலைவர்களே துணை புரிந்தனர்.  இதைத் தடுக்க விரும்பியவர் சுவாமி சிரத்தானந்தா; அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் மதம் மாறிய முஸ்லிம்களை தாய்மதம் திரும்பும் பணியை நடத்தினார்.  ஒருநாள் உடல்நலமின்றி படுத்திருந்த சுவாமி சிரத்தானந்தாவை, அவர் ஆசிரமத்துக்கு வந்து அப்துல் ரஷீத் என்கிற இளைஞர் அவரைச் சுட்டுக் கொன்றார். நீதிமன்றம் ரஷீதுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ரஷீதின் இறுதி ஊர்வலத்தில் திரளான எண்ணிக்கையில் காங்கிரஸôர் கலந்துகொண்டனர்.  சிரத்தானந்தாவின் கொலையை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைவிட்டனர்.  ஆனால், பகத்சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவரது உயிரைக் காப்பாற்ற மனு தயாரித்து காங்கிரஸ் பெருந்தலைவர்களிடம் கையொப்பம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். பகத்சிங் வன்முறையைக் கடைப்பிடித்தார் எனக் காரணம் சொன்னதும் அதே தலைவர்தான்.  காக்கிநாடா மாநாட்டில் வந்தேமாதரம் பாடப்பட்டபோது தலைமை வகித்த அகில இந்திய காங்கிரஸின் தலைவரே எதிர்த்து வெளிநடப்புச் செய்தார். எந்தப் பாடல் தேசத்துக்காகத் தன்னுயிரையும் தந்து போராட ஊக்கம் தந்ததோ அந்த பாரதத்தாயின் புகழ்பாடும் பாடல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக வெட்டப்பட்டது. பல்லவியையும் முதல் சரணத்தையும் மாத்திரம் தக்க வைத்துக் கொண்டார்கள்.  வரலாறு நீளும். காங்கிரஸின் தாஜா செய்யும் போக்கின் பட்டியலும் நீளும். அன்று பாட்டை வெட்டியதுதானே பின்னாளில் நாட்டை வெட்டியதில் முடிந்தது!  வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா? விடுதலை பெற்ற பிறகு மீண்டும் தாஜா செய்யும் படலம் தொடங்கி வளர்ந்து வருகிறதே. அது மீண்டும் ஒரு பிரிவினையில் கொண்டு போய் விடாது என்பது என்ன நிச்சயம்?  விடுதலை பெற்ற பிறகு அரசு செய்யும் தாஜாவின் சமீபத்திய கொடுமை கல்வி நிலையங்களில் ஆரம்பப்பள்ளி தொடங்கி உயர்நிலை, மேற்படிப்பு வரை மாணவர்களில் இந்து அல்லாதவருக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகுப்பிலேயே மாணவர்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்கும் இந்த அரசுகள் தானே பச்சையான வகுப்புவாத அரசுகள்.  கொட்டிய பிறகும் தேள் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை என்னவென்று சொல்வது? நாட்டை வெட்டிய பிறகும் புரிந்து கொள்ளாதவர்களை என்ன செய்வது?  தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டில் வாழும் மக்களை மதரீதியாகப் பிரித்தாளும் காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சியாம்!  மாறாக இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதங்கள் மட்டுமே அன்னிய நாட்டிலிருந்து வந்தவை; இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மவர்கள். அவர்களது பாரம்பரியமும், பண்பாடும், உடலில் ஓடக்கூடிய ரத்தமும், இந்துக்களது பாரம்பரியமும் பண்பாடும் ரத்தமும் ஒன்று.  நாம் பாரதத்தாயின் குழந்தைகள். "எல்லாரும் ஓர் இனம். எல்லாரும் ஓர் குலம். எல்லாரும்  இந்நாட்டு மன்னர்' என நம்புகிற பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சியாம். 
என்ன கொடுமையடா இது!



குஜராத் விவகாரம் – சோ
‘என்கௌன்டர் என்கிற பெயரில் குஜராத் போலீஸ், சோராபுதீன் என்பவரை கொலை செய்தது; இதை ஏற்பாடு செய்தவர் அம்மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா; அவர் கொலைக்குற்றம் செய்தவர் ஆகிறார்...’ என்று கூறி ஸி.பி.ஐ. குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்திருக்கிறது. அதற்கு முன்பாக கைதாகி, சில ஆண்டுகளாக சிறையிலிருக்கும், பல போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இது ஒன்றுதானா என்கௌன்டர் ?

பல ஆண்டுகளாகவே, பல மாநிலங்களில் என்கௌன்டர்கள் நடப்பதும், போலீஸார் செய்த கொலைகளே அவை என்ற புகார்கள் எழுவதும், பின்னர் இந்த விவகாரங்கள் மறக்கப்படுவதும் நமக்குப் பழகி விட்ட விஷயங்கள். பழைய நிகழ்ச்சிகளை விட்டு விட்டு சமீபத்திய நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

2002-லிருந்து 2006 வரை நாட்டில் நடந்த என்கௌன்டர்கள் மொத்தம் 712. இவற்றில் 440 என்கௌன்டர்கள் (போலியானவை என்ற புகார்கள்) பற்றிய விசாரணை, தேசிய மனித உரிமைக் கமிஷன் முன்பு இருக்கிறது - என்பது 2006 மார்ச் மாத நிலவரம். இவற்றில் குஜராத் தொடர்புடையவை ஐந்தே ஐந்துதான். உத்திரப் பிரதேசம் - 230; மஹாராஷ்ட்ரம் - 30; ஆந்திரப் பிரதேசம் - 20; அஸ்ஸாம் - 12... என்று இந்தக் கணக்கு போகிறது. இந்த மற்ற என்கௌன்டர்கள் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை.

தேசிய மனித உரிமைக் கமிஷன் முன் இருக்கும் நூற்றுக்கணக்கான என்கௌன்டர்கள் பற்றியோ, மொத்தமாக உள்ள 712 என்கௌன்டர்கள் பற்றியோ, புகார்கள் இருந்தாலும் விசாரணை கிடையாது; நீதிமன்ற உத்திரவும் கிடையாது; ஸி.பி.ஐ.யும் கிடையாது. ஆனால், குஜராத் என்கௌன்டர் பற்றி மட்டும் விசாரணை அது இது என்று அமர்க்களப்படுகிறது. ஏன்? ‘நீதிமன்றம் உத்திரவிட்டது; அதுதான் காரணம்’ என்பது ஒரு பதிலாகக் கூறப்படலாம். அது எப்படிப்பட்ட பதிலாக இருக்கும்?

நீதிமன்றத்திற்குச் செல்கிற மனித உரிமைக்காரர்கள் குஜராத்தைக் குறி வைக்கும்போது, அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்களாகி விடுகிறார்கள். அவர்களுடைய புகார்களை காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் எடுக்கிற நிலை, சுப்ரீம் கோர்ட்டில் அரசு எடுக்கிற நிலையாகி விடுகிறது. அப்படியிருக்க, சுப்ரீம் கோர்ட்டில் ‘சோராபுதீன் என்கௌன்டர் பற்றி ஸி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று மனித உரிமைக்காரர்கள் கோருகிறபோது, அதை அரசு எதிர்க்கப் போகிறதா என்ன?

நீதிமன்ற உத்திரவு...
இந்தச் சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் திரு. சாட்டர்ஜி எனும் நீதிபதியின் முன்பு ஒரு பொதுநல வழக்கில், ‘சோராபுதீன் என்கௌன்டர் பற்றி ஸி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. (நீதிபதி திரு.சாட்டர்ஜி, பிராவிடண்ட் ஃபண்ட் வழக்கில் குறிப்பிடப்பட்ட நீதிபதிகளில் ஒருவர். அவர் பொதுநல வழக்கில் கோரப்பட்டபடி, ஸி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டார். உடனே, பிராவிடண்ட் ஃபண்ட் வழக்கிலிருந்து அவர் பெயர் நீக்கம் பெற்றது. இதேபோல, குஜராத் கலவரங்கள் பற்றி விசேஷ விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று உத்திரவிட்ட நீதிபதி, அடுத்த சில தினங்களில் ஓய்வு பெற்று, காம்பெடிஷன் கமிஷன் தலைவராக நியமனம் பெற்றார். இதை வைத்துக் கொண்டு நீதிபதிகளின் நோக்கம் பற்றி நாம் ஏதும் கூறுவதாக நினைத்து விடக் கூடாது. ஆனால், நிகழ்ச்சிகள் நடக்கிற வேகத்தைப் பார்க்கிறபோது நமக்கு ஒன்று புரிகிறது.
சில நீதிபதிகள் அளிக்கிற தீர்ப்புகள் அரசுத் தரப்புக்கு பிடித்த தீர்ப்புகளாக இருந்தால், அவற்றை அளித்த நீதிபதிகளுக்கு அரசு ஏதாவது ‘மரியாதை’ செய்கிறது. இது நீதிமன்றத்தையும், நீதிபதிகளின் நற்பெயரையும் அரசு எப்படி கெடுக்கப் பார்க்கிறது என்பதற்கு உதாரணம்; அதுதான் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இது தவிர, நீதிபதிகளின் நோக்கம் பற்றிய கருத்து அல்ல.) அரசியல் ஆனது எப்போது ? இந்த விவகாரம் இப்போது பா.ஜ.க.வினால் அரசியல் ஆக்கப்படுகிறது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. ஆனால், இது அரசியல் ஆனது இப்போது அல்ல.

குஜராத் தேர்தல் நடந்தபோது சோனியா காந்தி மிகவும் முனைந்து பிரச்சாரம் செய்தார்; சில தேர்தல் கணிப்புகள் மோடிக்கு எதிராக அமைந்ததால், அவருடைய ஆசை அதிகமாகியது. அந்த உற்சாகத்தில் அப்போது ‘மோடி மரணத்தின் வியாபாரி’ என்று சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். இதை நியாயப்படுத்துவதற்காக சோராபுதீன் என்கௌன்டரை அவர் சுட்டிக் காட்டி, அது மோடி செய்த கொலை என்று பேசினார். அப்போது, சோராபுதீனை ஒரு அப்பாவியாக அவர் சித்தரித்தார். (நல்லவேளையாக அவரை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியாக சோனியா காந்தி வர்ணிக்கவில்லை.) மக்கள் சோனியா காந்தியின் பிரச்சாரத்தை நிராகரித்தனர். சோராபுதீனை அப்பாவியாக அவர் சித்தரித்ததை மக்கள் ஏற்கவில்லை. மோடியை மரணத்தின் வியாபாரி என்று அவர் பேசியது, பின்னர் அவருக்கே சங்கடமான விஷயமாகப் போயிற்று. அப்போது அரசியல் ஆனதுதான் இந்த விவகாரமே தவிர, இப்போது பா.ஜ.க.வினால் இது அரசியல் ஆக்கப்படவில்லை.

இப்போது, ஸி.பி.ஐ. விசாரணை என்றவுடன், யாருக்குத் திருப்தி ஏற்படுகிறதோ இல்லையோ, சோனியா காந்திக்கு பெரும் திருப்தியாகத்தான் இருக்க முடியும். நானூறுக்கும் மேற்பட்ட என்கௌன்டர் புகார்கள் தேசிய மனித உரிமைக் கமிஷன் விசாரணையில் இருந்தபோதும், குஜராத் என்கௌன்டர் மட்டும் ஸி.பி.ஐ. விசாரணைக்குப் போகிறது என்றால் – குஜராத்தில் படுதோல்வி கண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு – மோடியை மரணத்தின் வியாபாரி என்று சொல்லி, அது எடுபடாமல் போனதை பார்த்து சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட தலைவிக்கு – திருப்தி ஏற்படாமல் இருக்குமா என்ன?

யார் இந்த சோராபுதீன் ?

சரி, சோனியா காந்தியினாலும், அவரைத் தொடர்ந்து பல பத்திரிகைகளினாலும் ஒரு அப்பாவியாகக் கருதப்படுகிற இந்த சோராபுதீன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? சிலவிவரங்களைப் பார்ப்போம் :
பாகிஸ்தான் உளவுப் பிரிவின் ஏஜென்ட்; விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்; தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாகச் செயல்பட்டவர்; பல கொலைகளைச் செய்தவர்; மத்தியப் பிரதேசத்திலும், மஹாராஷ்டிரத்திலும், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் போலீஸால் தேடப்பட்டவர். இந்த ‘அப்பாவி’யின் பண்ணை சோதனையிடப்பட்டபோது, 22 ஏ.கே.56 துப்பாக்கிகள்; 22 கையெறி குண்டுகள்; ஏ.கே.56 துப்பாக்கிகளுக்கான 250 ரௌண்ட் ரவைகள்; பல குண்டுகளை உள்ளடக்கிய 81 மாகாசைன்கள்... போன்றவை கைப்பற்றப்பட்டன. இது பாகிஸ்தான் உளவுத் துறையினால், தாவூத் இப்ராஹிமின் உதவியுடன் சோராபுதீனுக்கு அனுப்பப்பட்டவை என்பது தெரிய வந்தது.

இப்பேர்ப்பட்ட ‘அப்பாவி’யின் செல்வாக்கு எப்படிப்பட்டது? இவர் ‘தடா’வில் கைதானார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானார். ஆனால், ஒரே வாரத்தில் ஜாமீனில் விடுதலை பெற்றார். அந்த விரைவு விடுதலையை அடுத்து, அவர் நேரத்தை வீணடிக்கவில்லை; பட்டப் பகலில், நடுத் தெருவில் மற்றொரு கொலையைச் செய்தார். இப்படிப்பட்டவரைத்தான் மஹாராஷ்டிர போலீஸ், ஆந்திரப் போலீஸ் ஆகியவற்றுடன் குஜராத் போலீஸும் துரத்திக் கொண்டிருந்தது.

என்கௌன்டர் போலிதான் !

இந்த போலீஸில் எந்த போலீஸ் சோராபுதீனை தீர்த்துக் கட்டுவது என்பதுதான் கேள்வியாக இருந்திருக்க முடியும். குஜராத் போலீஸ் தீர்த்துக் கட்டியது என்று நான் நினைக்கிறேன். ஒரு விஷயம் – குஜராத் அரசே கூட சோராபுதீன் கொல்லப்பட்ட என்கௌன்டர் போலி என்கௌன்டர்தான் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு விட்டது. (என்கௌன்டர்கள் என்பவை பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்ன என்பதை ஏற்கெனவே நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். அது வாசகர்களின் நினைவிற்காக இந்தக் கட்டுரையுடன் ஒரு பெட்டிச் செய்தியாக பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள் அதை மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

குஜராத்தில் சோராபுதீன் விவகாரத்தில் மட்டுமல்லாமல், மற்ற வன்முறை நிகழ்ச்சிகள், தீவிரவாத தாக்குதல்கள் போன்றவற்றில் கூட மிகத் திறமையாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைப் பிடித்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பலர், இப்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வருடங்களாக சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. அது எப்படி கிடைக்கும்? அவர்கள் என்ன சோராபுதீன் மாதிரி அப்பாவிகளா? அவரை மாதிரி தேசத்திற்குத் தேவையானவர்களா? சோராபுதீன் மாதிரி செல்வாக்கு அவர்களுக்கெல்லாம் கிட்டி விடுமா என்ன – அவர்கள் கேட்டவுடன் ஜாமீன் பெறுவதற்கு? அவர்களுக்கெல்லாம் இப்போது இருப்பது, ஒரே ஒரு வழிதான். மோடிக்கு எதிராக - குஜராத் அரசுக்கு, எதிராக ஏதாவது வாக்குமூலம் தயாரித்து தந்தால் அவர்களுக்கு அப்ரூவர் அந்தஸ்தும், விடுதலையும் கிடைக்கலாம். மற்றபடி வேறு வழி இப்போதைக்குத் தெரியவில்லை.

ஆந்திரப் போலீஸின் பங்கு என்ன ?

இந்த மகாத்மா சோராபுதீனுக்காக பரிந்து கொண்டு பேசுகிறவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான், சுப்ரீம் கோர்ட் ஸி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டது. ஆனால், அதிலும் ஒரு விநோதம். குஜராத் போலீஸ் வசமிருந்து இந்த விசாரணையை மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதற்கு, அந்த நீதிமன்றமே சில காரணங்களைக் கூறியது. அதில் ஒரு காரணம், ‘ஆந்திரப் போலீஸில் 7 பேர் இந்த சோராபுதீன் விவகாரத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். சோராபுதீனைத் துரத்தி வந்த அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி குஜராத் போலீஸ் தங்கள் விசாரணையில் எதுவும் சொல்லவில்லை. ஆகையால், இதை மாற்றி ஸி.பி.ஐ.க்குக் கொடுக்கிறோம்’ என்று நீதிமன்றம் கூறியது. அதாவது, ‘ஆந்திரப் போலீஸின் பங்கு என்ன? என்பதை ஸி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும்; அதைப் பற்றிய அறிக்கை வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது ஸி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று. ஆனால், ஸி.பி.ஐ. இப்போது ஆந்திரப் போலீஸ் பக்கமே போகவில்லை. அங்குதான் காங்கிரஸ் அரசு நடக்கிறதே? அவர்களைச் சங்கடப்படுத்தலாமா? ஆகையால் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியும் கூட, ஆந்திரப் போலீஸ் சோராபுதீன் விவகாரத்தில் என்ன தொடர்பு கொண்டது என்பதைப் பற்றி ஸி.பி.ஐ. கொஞ்சம் கூட கவனிக்கவில்லை. இதிலிருந்தே இந்த விசாரணை முற்றிலும் அரசியல் ரீதியானதே என்பது தெளிவாகிறது
வந்தது புதிய குற்றச்சாட்டு!
இப்படியாகத்தானே ஸி.பி.ஐ. விசாரணை வந்து ஒரு சில மாதங்கள் ஆகியும் - அதற்கு முன்பு ஒரு சில வருடங்கள் கழிந்தும் – பணப் பறிப்பு சமாச்சாரத்திற்காகத்தான் சோராபுதீன் கொலை செய்யப்பட்டார் என்று யாருமே சொல்லவில்லை. மனித உரிமைக்காரர்கள் கூட இப்படி எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது ஆட்சியாளர்களுக்கே ஒரு விஷயம் தெளிவாகி விட்டது. காங்கிரஸ் முயன்றும் – சோனியா காந்தி பிரச்சாரம் செய்தும் – சோராபுதீன் அப்பாவி என்ற பொய் எடுபடவில்லை. ஆகையால், என்கௌன்டர், என்கௌன்டர் என்று காங்கிரஸ்காரர்கள் கத்தியபோது குஜராத் மக்கள், ‘யார் சம்பந்தப்பட்டது? தீவிரவாதிதானே? மிகப் பெரிய கிரிமினல் பேர்வழிதானே? சரி, சரி’ என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆகையால், குஜராத் அரசின் பெயரைக் கெடுப்பதற்கு வேறு ஒரு புதிய குற்றச்சாட்டுத் தேவைப்பட்டது.

பிறந்தது யோசனை. பணப்பறிப்பு! ‘பலாத்காரமாக பணத்தைப் பறிக்கிற தொழிலில் உள்ளவர்கள் மற்றும் பணத்தைப் பறி கொடுத்தவர்கள் – ஆகியோரிடையே மோதல் வந்தது. அதில் சிலருக்காக குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்திரவிட, குஜராத் போலீஸ் சோராபுதீனை கொலை செய்தது’ என்ற குற்றச்சாட்டு பிறந்தது. அதாவது, பல ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவர்களைத் தவிர சில உயரதிகாரிகள், உள்துறை அமைச்சர் ஆகிய எல்லோரும் சேர்ந்து சோராபுதீனை பணப் பறிப்பு சமாச்சாரத்திற்காக கொன்று போட்டு விட்டார்கள். இதை நம்ப வேண்டுமென்றால், இதுவரை சட்டமோ, நீதிமன்றமோ கண்டிராத அளவுக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள் தேவைப்படுமே?

சாட்சியத்தின் லட்சணம் !

ஆனால், கிடைத்த சாட்சியம் என்ன? ஒரு நிலப் பறிப்பு மோசடி ஆசாமி - மகனைக் கொலை செய்து விட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்; நிலப் பறிப்பிலேயே ஊறிப் போய் சிறையில் உள்ளவர் இன்னொருவர். இந்த இரண்டு பேர்தான் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி ‘இது பணப்பறிப்பு சமாச்சாரம்’ என்று கூறிவிட்டார்கள் (கூறினார்களா, கூற ஒப்புக் கொண்டார்களா – என்பது பிறகு எப்போதாவது தெளிவாகலாம்). இவர்களோடு ஏற்கெனவே சிறையில் உள்ள – வெளியே வர வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிற –ஒரு குற்றமும் செய்யாத போலீஸ் காரர் ஒருவர் அப்ரூவராகி விட சம்மதித்து இருக்கிறார். இப்படிப்பட்ட சாட்சியங்களைக் கொண்டு, இந்த வழக்கு பதிவாகிறது.

சரி, இந்த மாதிரி ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிற்குமா? – என்று கேட்கலாம். நிற்காது. நிற்காவிட்டால் போகட்டுமே! வழக்கு நிற்க வேண்டும் என்று என்ன அவசியம்? வழக்கு முடிவதற்கும், தீர்ப்பு வருவதற்கும் சில வருடங்கள் ஆகிவிடுமே? அதற்குள் பத்திரிகைகளின் உதவியுடன், ‘குஜராத்தில் போலி என்கௌன்டர்... பணப் பறிப்பு விவகாரத்தில் – போலீஸாரைத் தூண்டி கொலை செய்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா... அவருக்கும் தலைமைக் கொலையாளியாகச் செயல்பட்டவர் நரேந்திர மோடி...’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, நாடு முழுவதும் மோடியையும், அவருடைய அமைச்சர்களையும் கொலைகாரர்களாக சித்தரித்து விடலாமே?அதற்குப் பிறகு வழக்கு நிற்காமல் போனால் போகட்டுமே! அவதூறு நிற்குமே! அது போதுமே – மோடியையும், குஜராத்தையும் மட்டுமல்லாமல், பா.ஜ.க.வையே தள்ளி வைப்பதற்கு!
ஓடி ஒளிந்தாரா, அமைச்சர் ?
அமித்ஷா கைதான விதமே, இந்த விசாரணை எவ்வளவு பெரிய கேலிக்கூத்து என்பதைத் தெளிவாக்குகிறது. முதலில் சில நாட்கள் பத்திரிகைகளில் ‘வதந்திகள்’; அமித்ஷா கைதாகப் போகிறார்; எந்த நிமிடமும் அமைச்சர் கைது...
இப்படி பத்திரிகைகளில் வதந்திகளும், வதந்திகளே செய்திகளாகவும் வெளிவரத் தொடங்கிய உடனே, ஸி.பி.ஐ.க்கு அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதி, ‘என்னை விசாரிக்கப் போகிறீர்களா? அப்படியானால் எனக்கு சம்மன் அனுப்புங்கள்’ என்று கோரினார். ஒரு பதிலும் இல்லை. சுமார் பத்து தினங்கள் கழித்து – அமித்ஷாவிடம் சில கேள்விகள் கேட்க விரும்புவதாகக் கூறி, ஸி.பி.ஐ. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தானாக வலுவில் விசாரணைக்கு முன்வந்தபோது, பதிலே தராத ஸி.பி.ஐ. – இப்போது நோட்டீஸ் அனுப்பியதாலும், பத்திரிகைகளில் ஏற்கெனவே கைது என்று வதந்தி வந்ததாலும், ஸி.பி.ஐ.யின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அமித்ஷா நேரம் எடுத்துக் கொள்கிறார். உடனே ‘அவர் தலைமறைவு’ என்று பத்திரிகைகளில் செய்தி வந்து விட்டது. இதற்குப் பின்னர் அமித்ஷா, கேள்வி கேட்கப்படுவதற்காக ஸி.பி.ஐ.யின் முன்னால் ஆஜரானார். ஸி.பி.ஐ. அவரை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. கைது செய்தது.

அடுத்த தினமே சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அவர் மீது தாக்கலாகி விட்டது. இது எப்படி? இது என்ன மேஜிக்? குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்படவேயில்லை. விசாரிக்க வேண்டும் என்று ஸி.பி.ஐ. கூறி நான்கு நாட்கள் ஆகின்றது. அதற்குள் அவரைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை ரெடி! இது நம் நாட்டிலேயே குற்ற விசாரணை விஷயத்தில் சாதனை படைத்திருக்கிற நிகழ்ச்சி. இதற்குப் பின்னர், நீதிமன்றக் காவலில் அமித்ஷாவை வைத்து பெயருக்கு அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இர்ஷாத் ஜஹான் கதை ஒன்று போதாதா?

‘தீவிரவாதிகள் விஷயத்தில் கூட, இப்படி மத்திய அரசைப் பற்றி சந்தேகப்படுவது நியாயமா?’ - என்று சிலர் மனதிலாவது கேள்வி எழுந்தால், அவர்கள் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்தால் போதும். இர்ஷாத் ஜஹான் என்கிற பெண்மணி குஜராத்தில், ஒரு என்கௌன்டரில் பலியானவர். இதற்காக குஜராத் அரசு மீது பெரிய புகார் எழுந்தது. இர்ஷாத் ஜஹான் எந்தப் பாவமும் அறியாத ஒரு சாதாரண பெண்மணி என்று செய்திகள் வெளியாயின
அப்போது குஜராத் போலீஸ், நீதிமன்றத்தில், ‘அந்தப் பெண்மணி ஒரு தீவிரவாதி, லஷ்கர்-இ-தெய்பாவுடன் தொடர்பு உள்ளவர்’ என்று கூறியது. லஷ்கர் - இ- தொய்பா என்ன செய்தது? ‘எங்களுடைய முதல் பெண் தியாகி இவர்’ என்று கூறி இர்ஷாத் ஜஹானைப் பெருமைப்படுத்தியது! அவர் மரணத்தை ஒரு வீரச் செயலாகப் போற்றியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு வேறு வழியில்லாமல், நீதிமன்றத்தில் ‘இர்ஷாத் ஜஹான் தீவிரவாதிதான்’ என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதற்கிடையே, மனித உரிமைக்காரர்கள் இர்ஷாத் ஜஹான் என்கௌன்டர் பற்றி பெரிய அளவில் புகார்கள் கிளப்பி, அவர் தீவிரவாதியே அல்ல என்று வாதாடி ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். பார்த்தது லஷ்கர்-இ-தொய்பா! தன் நிலையை அது மாற்றிக் கொண்டது. ‘அந்தப் பெண்மணி எங்கள் இயக்கத்தைச் சார்ந்தவரே அல்ல’ என்று அறிவித்து விட்டது. ஏன்? அப்போதுதான் குஜராத் அரசு மீது பழி பெரிதாக விழும் என்பதால்! உடனே மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாணம் தாக்கல் செய்தது: ‘முன்பு நாங்கள் செய்த சத்தியம் தவறு, இர்ஷாத் ஜஹான் தீவிரவாதி அல்ல’ என்று மத்திய அரசு கூறிவிட்டது. லஷ்கர் - இ- தொய்பா எவ்வழி, மத்திய அரசு அவ்வழி என்பதுபோல் ஆகிவிட்டது.

இத்தனைக்கும், இர்ஷாத் ஜஹானுடன் சேர்ந்து பலியானவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் – அது அவர்களிடமிருந்த பாஸ்போர்ட் முதலானவற்றால் தெளிவாகியது. அதாவது, பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு உள்ளவர் இர்ஷாத் என்பது தெளிவு. இப்படிப்பட்டவருக்கு வக்காலத்து வாங்கியது மத்திய அரசு! இப்படி நிகழ்ந்தவுடன் ஸி.பி.ஐ. விசாரணை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அதுதான் ஸி.பி.ஐ. இருக்கவே இருக்கிறதே – காங்கிரஸுக்கு ஏவல் புரிய! அது தயாராகத்தான் இருந்திருக்கும். ஆனால், அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம்
அமெரிக்காவில் விசாரிக்கப்பட்ட தீவிரவாதி ஹெட்லி, ‘இர்ஷாத் ஜஹான் என்கிற பெண்மணிலஷ்கர் - இ- தொய்பாவைச் சார்ந்தவர்தான்’ என்று அடித்துக் கூறி, சாட்சியம் அளித்து விட்டார்.

அவர் இப்படிக் கூறியது, இந்திய விசாரணை அதிகாரிகளிடம்! அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லியிருந்தாலாவது, ‘தெரியவில்லை – விசாரிக்க வேண்டும்..’ என்று ஏதாவது சொல்லி மழுப்பியிருக்கலாம். ஆனால் இந்திய அதிகாரிகளிடமே அவர், இப்படிப் போட்டு உடைத்து விட்டதால், மத்திய அரசுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. முழிக்கிறது. சரி, பரவாயில்லை. சோராபுதீனை கையில் வைத்துக் கொண்டு குஜராத் அரசை ஒரு கை பார்ப்போம் என்று இப்போது முனைந்திருக்கிறது. அதற்கு ஸி.பி.ஐ. ஏவல் புரிகிறது.

சோனியாவின் சித்தம், ஸி.பி.ஐ.யின் பாக்கியம்!

ஸி.பி.ஐ. மத்திய அரசின் அடியாளாக மாறி வெகு காலமாகி விட்டது. நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவு தேவை என்றால் கூட, ஸி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது. சிலர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, அது மத்திய அரசுக்கு ஆதரவு தேடிக் கொடுக்கிறது.

அல்லது காங்கிரஸுக்கு எதிராகச் செயல்படுகிறவர் மீது வழக்குப் பதிவு செய்து, மிரட்டி பணிய வைக்கிறது. இதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயங்களாகி விட்டன. க்வாட்ரோக்கி விவகாரம் ஒன்று போதாதா – ஸி.பி.ஐ.யின் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ள? சோனியா காந்தியின் சித்தம் ஸி.பி.ஐ.யின் பாக்கியம். இப்படிப்பட்ட ஒரு அமைப்பு குஜராத் விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பது அசட்டுத்தனம்.

காங்கிரஸுக்கு குஜராத் மட்டும் குறியல்ல. நாளைய தேர்தல்களில் பா.ஜ.க.வை பயங்கரமாக வீழ்த்த வேண்டும். இன்னும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் நல்ல பலமும்; பஞ்சாப், மஹாராஷ்டிரம், பீகார் போன்ற மாநிலங்களில் கணிசமான பலமும் கொண்டு திகழ்கிற பா.ஜ.க.வை வீழ்த்த சரியான ஆயுதம் தேவை. அது தவிர, இந்தியாவிலேயே மிகச் சிறந்த நிர்வாகத்தைத் தருகிறார் என்ற பெயரையும், அப்பழுக்குச் சொல்ல முடியாத நேர்மையாளர் என்கிற பெயரையும் பெற்று, தேசிய அளவில் அனைவர் கவனத்தையும் கவர்ந்து வருகிற நரேந்திர மோடியின் பெயரையும் நாசமாக்க வேண்டும். இதற்கான முயற்சிதான் இப்போது நடக்கிற ஸி.பி.ஐ. நாடகம்.
வெறும் அரசியல் ஆதாயத்திற்காக – மோடியையும், பா.ஜ.க.வையும் ஒடுக்குவதற்காக – காங்கிரஸ் தலைமையின் கட்டளையின் பேரில், ஸி.பி.ஐ. நடத்துகிற இன்றைய கூத்து, எதிர்காலத்தில், விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்தும். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட மட்டும் அல்ல – அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவும் கூட – போலீஸார் தயங்குவார்கள். ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்குவார்கள்.
ஆட்சியாளர்கள் கூட, நாளை நமக்கு ஏதாவது அவதூறும், வழக்கும் வருமோ – என்று கவலைப்படுவார்கள். ஆக, தீவிரவாதிகளுக்கு, ‘உங்கள் மீது நடவடிக்கை வராது’ என்ற உத்திரவாதம் அளித்தது போல் ஆகிவிடும். இதை மக்கள் புரிந்து கொண்டால் பா.ஜ.க.விற்கு இப்போது தரப்படுகிற ஆதரவு பல மடங்காகப் பெருகி, மத்திய அரசின் விபரீதமான போக்கிற்குத் தடை போட முடியும்.

மக்கள் விழித்துக் கொண்டால்....!

நேர்மையாக, மிகத் திறமையுடன் ஒரு ஆட்சியை நடத்த முடியும் என்று நிரூபித்து வருகிறவர் நரேந்திர மோடி. நேர்மையும், திறமையும் தங்களுக்குப் பெரும் பகை என்று நினைக்கிற காங்கிரஸ், மோடி மீது கொண்டுள்ள துவேஷம் இப்போது குஜராத்தைச் சுடுகிறது. அடுத்து, இது நேர்மையான அரசியலையே சுடும். மக்கள் விழித்துக் கொள்வதுதான் இதைத் தவிர்க்க ஒரே வழி.
 
-- thukluk 10.08.2010..
ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்.
ஓசூர் ஹேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல், பெருவிழா ஜெப கூட்டம் நடக்கிறது. ஓசூர் டவுன், மத்திகிரி, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. மத பிரசாரம் என்ற பெயரால், இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக, இந்து அமைப்புகள் சார்பில் புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், மத பிரசாரம் மற்றும் மத மாற்றத்தைக் கண்டித்து, ஓசூரில் நேற்று, அரை நாள், "பந்த்'க்கு அழைப்பு விடுத்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு, பஜ்ரங்தள் நகர தலைவர் விஷ்ணுகுமார் தலைமையில் இந்து அமைப்பினர், நேற்று முன்தினம் மாலை, வீதி, வீதியாகச் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், "பந்த்'க்கு ஆதரவு கேட்டனர். இந்து அமைப்புகளின், "பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்து, ஓசூர் நகர் முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.
டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு நூறு அடிக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். ரயில்வே ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், மூன்று பேர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இந்து அமைப்பினர் மூன்று கடைகளை அடைக்க கூறியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடைகளை சிலர் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ஜனபர் பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (31), மத்திகிரி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுமன் (24), ஓசூர் நகர அமைப்பாளர் வெங்கடேஷ் (28), நாகராஜ் (25), மூர்த்தி (28) ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தகவலறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், இந்து அமைப்பினரும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகையிட்டு, கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். மதியம் 1 மணிக்கு பின், வழக்கம் போல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு கூறுகையில், "ஓசூர் தாலுகா பகுதியில், இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து, அமைதியான முறையில் "பந்த்' நடத்தப்பட்டது. மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.






டியர் சாரு,
உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம்.  விஜய் டி.வி.யின் நீயா நானா குழுவில் பணியாற்றுபவர்களில் நானும் ஒருவன்.  என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
நீயா நானாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஆண்டனி கருப்பாக இருப்பவர்களை குரங்கு மூஞ்சி என்று குறிப்பிடுவது பற்றி எழுதியிருந்தீர்கள்.  உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன எழுதுவீர்களோ தெரியாது.  நிறத்தையும் உருவத்தையும் வைத்து ஏளனம் செய்தால் ஐரோப்பாவில் அதை இனவாதம் என்று சொல்லி ஜெயிலில் போட்டு விடுவார்கள்.  இங்கே ஆண்டனி செய்வது அது மட்டும் அல்ல.  கிட்டத்தட்ட ஒரு மத வெறியரைப் போல் அவர் நடந்து கொள்கிறார்.  முக்கியமாக இந்து மற்றும் இஸ்லாம் மீது தன் மீடியாவை வைத்து பிரச்சினை கொடுக்கிறார்.
சில உதாரணங்கள்:
சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பர்தா அணியலாமா கூடாதா என்று ஒரு டாக் ஷோவுக்குத் திட்டமிடப் பட்டு, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் அது கை விடப் பட்டது. பர்தா அணியலாமா கூடாதா என்று சொல்ல அல்லது விவாதிக்க ஆண்டனி யார் என்பது என் கேள்வி.
சென்ற வாரம் – அதாவது, நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஷூட் செய்வதற்கு மறுநாள் ஒரு டாக் ஷோவை ஷூட் செய்ய இருந்தோம்.  பொது இடங்களில் மக்கள் மத அடையாளத்துடன் வரலாமா கூடாதா என்பதே விவாதத்தின் தலைப்பு.  இதிலிருந்தே நீங்கள் ஆண்டனி என்பவரின் இந்து விரோதப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.  மத அடையாளம் என்றால் என்ன? நெற்றியில் விபூதியோ, ஸ்ரீசூர்ணமோ அணியலாமா கூடாதா என்பதே அந்தத் தலைப்பின் உள்குத்து.  இதை விவாதிக்க இந்த ஆண்டனி என்பவர் யார்?  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பற்றி பணம் பண்ணுவதற்காகவும், தன் டாக் ஷோவை பிரபலப் படுத்துவதற்காகவும் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல ஆண்டனியின் நோக்கம்.  இந்து மதத்தின் மீது மற்றவர்களுக்கு துவேஷத்தை ஏற்படுத்துவதே அந்தத் தலைப்பின் நோக்கமாக இருந்தது.  மத அடையாளம் என்றால் அது நேரடியாக இந்து மதத்தைத் தாக்குவதே ஆகும்.   ஏனென்றால், ஒருவரின் மத அடையாளத்தை அவருடைய வர்க்க பேதம் எதுவும் இல்லாமலேயே உடனே தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.  அதனால்தான் அந்த விவாதத் தலைப்பு இந்துக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறேன்.
இந்த டாக் ஷோவில் உங்கள் நண்பர் மனுஷ்ய புத்திரனும் பிரதம விருந்தாளியாக கலந்து கொள்ள இருந்தார்.  உன்னைப் போல் ஒருவன் என்ற இஸ்லாமிய விரோதப் படத்தில் பாட்டு எழுதியதற்காக அவரையும் மன்னிப்புக் கேட்க வைப்பதற்காக அழைத்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால் அவர் உங்களைப் போல் வெகுளி அல்ல.  நிச்சயம் அன்றைய தினம் கோபியின் விழிகள் பிதுங்கி இருக்கும்.  மனுஷ்ய புத்திரனின் விவாதத் திறமையும் கூரிய புத்தியும் உயிர்மையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகின்றன.  (ஆமாம், நான் உயிர்மையின் நீண்ட நாள் வாசகன்).
ஆனால் இந்த டாக் ஷோ ரத்து செய்யப்பட்டு விட்டது;  ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால்.
நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை மீண்டும் சற்று கவனித்துப் பாருங்கள்.  ஒருவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.  அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் சேர்க்கப்பட்டதன் காரணம், அவர் ஆண்டனியின் பினாமி.  அவர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? கிறிஸ்தவ மதத்தில் நித்யானந்தா போன்ற போலிகள் இல்லை என்றார்.  பிறகு பவா செல்லத்துரை கண்டனம் செய்ததால் “அங்கேயும் சில பாதிரியார்கள் தவறு செய்கிறார்கள்” என்று ஒத்துக் கொண்டார்.  ‘நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளை மட்டும் தாக்கவில்லை; பொதுவாகத்தான் இருக்கிறோம்’ என்று போலியாகக் காண்பித்துக் கொள்வதற்காகவே தமிழ் பேசத் தெரியாத அந்த நபர் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டார்.
நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் ஆண்டனி இந்து மற்றும் இஸ்லாமுக்கு எதிராகவே தொடர்ந்து நடந்து கொள்கிறார்.  இதை உங்கள் இணைய தளம் பகிரங்கப் படுத்த வேண்டும்.
அன்புடன்,
… … …
விஜய் டி.வி.யின் ஹிந்து எதிர்ப்பு


எழுத்தாளர் சாரு நிவேதிதா; 'நீயா நானா' கோபிநாத் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனியால் தான் எப்படி அவமானப்பட்டேன் என்பது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை.............
உங்கள் பார்வைக்கு....



மன்னிப்புக் கேள்!

மன்னிப்புக் கேள்!
June 1st, 2010
மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.
இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.
கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.
என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.
நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.
அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன். விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?
ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.
ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.
இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?
தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.
மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.
ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.
(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).
1.6.2010.
10.07 a.m.










BY





TAGS:
RCC NIGHT MATCH VIDEO, RCC NIGHT MATCH PHOTOS