என்ன கொடுமையடா இது?
இல.கணேசன்
--
--
காங்கிரஸ் என்பது ஒரு மதச்சார்பற்ற கட்சி; பாரதிய ஜனதா ஒரு வகுப்புவாதக் கட்சி'' என்கிற தோற்றம் நிலவி வருகிறது. ஆம், இரண்டுமே தோற்றம்தான். காட்சிப் பிழைதான். உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் போற்றுவது பா.ஜ.க.; பச்சையான வகுப்புவாதக் கட்சி காங்கிரஸ் என்பதுதான் உண்மை நிலை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது. காங்கிரûஸத் தோற்றுவித்தவன் ஆங்கிலேயன். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மகாராணிக்கு ஓர் எதிர்க்கட்சி அன்று இருந்ததுபோல இங்கும் ஒரு கட்சியை உருவாக்க விரும்பினான். பெயரளவுக்குத்தான் எதிர்க்கட்சி. இன்றைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ள பிரதான எதிர்க்கட்சியின் பங்கைத்தான் அன்றைய காங்கிரஸ் செய்தது. காலம் மாறியது. லோகமான்ய பாலகங்காதர திலகர் போன்றவர்கள் தலையெடுத்தார்கள். எந்தக் காங்கிரஸ் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைத்து வெள்ளையன் தொடங்கினானோ அதே காங்கிரஸ், அரசுக்கு எதிராகத் திரும்பியது. வீறுகொண்டது. ""சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை'' என முழங்கியது. ""நீங்கள் ஒரு இந்துக் கட்சி. உங்களுக்குச் சுதந்திரம் தந்தால் முஸ்லிம்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் முஸ்லிம்களது ஆதரவையும் பெற்று வாருங்கள். பரிசீலிப்போம்'' என்றனர் ஆங்கிலேயர்கள். கவனியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆங்கிலேயர் தந்த முத்திரை இந்துக் கட்சி. முஸ்லிம் லீக் தொடங்கவும் ஆங்கிலேயனே பின்னணியில் திட்டமிட்டான். ஆஹாகான் தலைமையில் பின்னாளில் முஸ்லிம் லீகும் தோன்றியது. ""முஸ்லிம் சமுதாயம் காங்கிரஸýக்குப் பின்னால் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆண்ட சமுதாயம்! உங்கள் உரிமைகளை நீங்கள் கேளுங்கள்'' என்று முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டான். அவனது தந்திரம் பலித்தது. 1857-ம் ஆண்டு யுத்தத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். அந்த ஒற்றுமை குலைந்தது. காங்கிரஸின் சிந்தனையில் எப்படியாவது முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் கொண்டு வரவேண்டும் என்கிற ஒரே சிந்தனை நிலவியது. முஸ்லிம்கள் காங்கிரஸிடம் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் மாநாட்டுக்கு வரும் முஸ்லிம் பிரதிநிதிகளது போக்குவரத்துச் செலவைக் கட்சியே ஏற்றது. மற்றவர்கள் பிரதிநிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்குத் தரப்படும் எளிய உணவு முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்கு விசேஷ ஏற்பாடு. காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் அணிய வேண்டும். காங்கிரஸின் வெள்ளை கதர் தொப்பி அணிய வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மத உடையுடன் (மத உடை என எதுவும் இல்லை. தேசத்தின் உடைதான்) மதத் தொப்பியுடன் வரலாம். சாதாரணமாக ஒரு கூட்டத்தில் ஒரு தீர்மானம் பெரும்பான்மை ஆதரவின்றிப் போனால் தோற்றுப் போகும். ஆனால், காங்கிரஸ் கூட்டங்களில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி அதிருப்தி தெரிவித்தாலும் தீர்மானம் விலக்கிக் கொள்ளப்படும். மதச்சார்பற்ற தன்மை பேசுகிற காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களது மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள். தேசியத்தன்மை உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலர் இருந்தும் காங்கிரஸ் முஸ்லிம் லீக்தான் முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதி என்கிற அந்தஸ்தை, அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட்டது. பின்னாளில் இந்த மதச்சார்பற்ற கட்சிதான் முஸ்லிம் லீகோடு கூட்டணியே வைத்தது. 1916-ல் லக்னௌ ஒப்பந்தம் என்பது காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம் லீக் தலைவர்களும் செய்து கொண்ட தாஜா ஒப்பந்தம். அதன் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஏற்கெனவே 1909-ல் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவைகளில் ஒதுக்கீடு வழங்கியது போதாது. இன்னும் கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி தேவை. கிலாபத் இயக்கம் என்பது முற்றிலும் மதம் சம்பந்தப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் மதச்சார்பற்ற காங்கிரஸ் முழு வீச்சில் பங்கேற்றது. ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிக்கு காங்கிரஸில் இருந்த முஸ்லிம் தலைவர்களே துணை புரிந்தனர். இதைத் தடுக்க விரும்பியவர் சுவாமி சிரத்தானந்தா; அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் மதம் மாறிய முஸ்லிம்களை தாய்மதம் திரும்பும் பணியை நடத்தினார். ஒருநாள் உடல்நலமின்றி படுத்திருந்த சுவாமி சிரத்தானந்தாவை, அவர் ஆசிரமத்துக்கு வந்து அப்துல் ரஷீத் என்கிற இளைஞர் அவரைச் சுட்டுக் கொன்றார். நீதிமன்றம் ரஷீதுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ரஷீதின் இறுதி ஊர்வலத்தில் திரளான எண்ணிக்கையில் காங்கிரஸôர் கலந்துகொண்டனர். சிரத்தானந்தாவின் கொலையை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைவிட்டனர். ஆனால், பகத்சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவரது உயிரைக் காப்பாற்ற மனு தயாரித்து காங்கிரஸ் பெருந்தலைவர்களிடம் கையொப்பம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். பகத்சிங் வன்முறையைக் கடைப்பிடித்தார் எனக் காரணம் சொன்னதும் அதே தலைவர்தான். காக்கிநாடா மாநாட்டில் வந்தேமாதரம் பாடப்பட்டபோது தலைமை வகித்த அகில இந்திய காங்கிரஸின் தலைவரே எதிர்த்து வெளிநடப்புச் செய்தார். எந்தப் பாடல் தேசத்துக்காகத் தன்னுயிரையும் தந்து போராட ஊக்கம் தந்ததோ அந்த பாரதத்தாயின் புகழ்பாடும் பாடல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக வெட்டப்பட்டது. பல்லவியையும் முதல் சரணத்தையும் மாத்திரம் தக்க வைத்துக் கொண்டார்கள். வரலாறு நீளும். காங்கிரஸின் தாஜா செய்யும் போக்கின் பட்டியலும் நீளும். அன்று பாட்டை வெட்டியதுதானே பின்னாளில் நாட்டை வெட்டியதில் முடிந்தது! வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா? விடுதலை பெற்ற பிறகு மீண்டும் தாஜா செய்யும் படலம் தொடங்கி வளர்ந்து வருகிறதே. அது மீண்டும் ஒரு பிரிவினையில் கொண்டு போய் விடாது என்பது என்ன நிச்சயம்? விடுதலை பெற்ற பிறகு அரசு செய்யும் தாஜாவின் சமீபத்திய கொடுமை கல்வி நிலையங்களில் ஆரம்பப்பள்ளி தொடங்கி உயர்நிலை, மேற்படிப்பு வரை மாணவர்களில் இந்து அல்லாதவருக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகுப்பிலேயே மாணவர்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்கும் இந்த அரசுகள் தானே பச்சையான வகுப்புவாத அரசுகள். கொட்டிய பிறகும் தேள் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை என்னவென்று சொல்வது? நாட்டை வெட்டிய பிறகும் புரிந்து கொள்ளாதவர்களை என்ன செய்வது? தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டில் வாழும் மக்களை மதரீதியாகப் பிரித்தாளும் காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சியாம்! மாறாக இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதங்கள் மட்டுமே அன்னிய நாட்டிலிருந்து வந்தவை; இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மவர்கள். அவர்களது பாரம்பரியமும், பண்பாடும், உடலில் ஓடக்கூடிய ரத்தமும், இந்துக்களது பாரம்பரியமும் பண்பாடும் ரத்தமும் ஒன்று. நாம் பாரதத்தாயின் குழந்தைகள். "எல்லாரும் ஓர் இனம். எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என நம்புகிற பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சியாம்.
என்ன கொடுமையடா இது!
1 comments :
ॐ’இந்து மதத்தையும் இந்தியாவையும் உலகில் சிறந்ததாக்க சேர்ந்து உழைப்போம் வாருங்கள்’ॐ
Post a Comment